கீதை வெண்பா 4 வது அத்தியாயம் ஞானகர்ம ஸந்நியாச யோகம் 1

கீதை 4 வது அத்தியாயம் ---ஞானகர்மா ஸந்நியாச யோகம்

கண்ணன் சொல்கிறான் :---
1 .
நானிந்த யோகம் விவஸ்வா னிடம்சொன்னேன்
அவ்விவஸ்வான் சொன்னான் இதனை மனுவிற்கு
அம்மனுவோ இவ்வழி வில்லாத யோகத்தை
இஷ்வாகு விற்குச்சொன் னான்

2
வழிவழியாய் நம்மிடம் வந்தயிந்த யோகத்தை
மாமுனிவ மன்னர்கள் நன்கறிந்தி ருந்தனர்
இவ்வுலகில் இப்பெரும் யோகத்தை நாமிழந்தோம்
காலச் சுழலிலந் தோ

3
என்தோழன் .என்பக்தன் நீஎனக்கு என்றுமே
ஆதாலால் தோழா இயம்பினேன் நானுக்கு
உன்னத மானது மேன்மைமிகு இந்த
மறைபொருள் யோகந் தனை

அருச்சுனன் கேட்கிறான் :--

4 .
கதிரவன் காலத்தால் முந்தியவன் அன்றோ
கதிரவனுக் குப்பின்னே வந்துதித்த கண்ணன்
கதிரவனுக் குச்சொன்னான் என்பதை நானும்
எதுவழி தேர்வேன் இயம்பு

5 .
கடந்துபோன நம்பிறவி எண்ணில் அடங்கா
நெடுந்தோளாய் அக்கடந்த வையனைத்தும் நானறிவேன்
நீயறியாய் வில்லாள னே

எழுதியவர் : கவின் சாரலன் (5-Sep-24, 5:11 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 19

மேலே