எதைத் தின்னாலும் செரிமானம் ஆகிறதில்லை
பிள்ளைகளுக்குப் பேரு வைக்கிறதில எச்சரிக்கையா இருக்கணும்.
நான் இந்த புள்ள பொறந்த போதே சொன்னேன். ஒரு நல்ல
சோசியர்கிட்ட கேட்டு அவ பொறந்த ராசிப்படி பேரு
வச்சிருக்கணும். என்ற மவன் எட்டியப்பன் எங்க என்ற பேச்சைக்
கேட்டான்.
@@@@@@@@@@@
என்ன பாட்டி தனக்குத் தானே பேசிட்டிருக்கறீங்க?
@@@@@@@@@@@@
வாடா தம்புசாமி. என்ற பேத்தி செரிக்கா பொறந்த போதே ஒரு
சோசியரைப் பாத்து அவ ராசிப்படி பேரு வைக்கச் சொல்லி என்ற
மவன் எட்டியப்பன்கிட்டச் சொன்னேன். அவன் என்ற பேச்சைக்
கேக்காம பட்டணத்துக்குப் போயி அவனுக்குத் தெரிஞ்ச யாரோ
ஒருத்தர் வடநாட்டிலிருந்து வந்தவராம். அவருகிட்ட என்ற
பேத்திக்கு ஒரு நல்ல இந்திப் பேராச் சொல்லச் சொல்லி
கேட்டானாம். அவுரு "உன்ற பொண்ணுக்கு 'செரிக்கா'னு பேரு
வையுங்க"னு சொன்னாராம், அந்தப் பேரை என்ற பேத்திக்கு
என்ற மவன் எட்டியப்பன் வச்சுட்டான். அந்தப் பேரு வச்ச ராசி
செரிக்கா பொறந்ததிலிருந்து இப்ப மூணு வயசு ஆகுது. அவ
எதைத் தின்னாலும் செரிமானம் ஆகமாட்டங்குது. கொழந்தையா
இருக்கையிலேயே குடிச்ச தாய்ப்பாலை பத்து நிமிசத்தில வாந்தி
எடுத்திருவா. இப்ப ஒரு இட்டிலி ஊட்டிவிட்டா செரிமானம் ஆகமா
அங்கயும் இங்கயும் அலைஞ்சிட்டு திரியறா. 'செரிக்கா'னு
அவளுக்குப் பேரு வச்சதினாலே அவ எதைத் தின்னாலும்
செரிமானம் ஆகமாட்டங்குது. நான் யாருகிட்டப் போயி இதைச்
சொல்லுவேன். அதுதாண்டா தம்புசாமி பொலம்பிட்டு இருந்தேன்.
@@@@@@@@@@@@@@
நீங்க சொல்லறது சரிதான் பாட்டி. ராசி பாக்காம பேரு வச்சிருக்கக்
கூடாது, எட்டியப்ப அண்ணன் ஏன் இது மாதிரி செஞ்சாருனு
தெரில பாட்டி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Cherika (चेरिका) = ‘The Moon’