பாதிநிலா வெள்ளைக் கடிதத்தில் தூதுவிட
ஆதவன் மேற்கே அழகில் விடைபெற
பாதிநிலா வெள்ளைக் கடிதத்தில் தூதுவிட
காதல்பே சும்கண் களால்சொல்லு முன்விழியின்
சேதிதான் என்னமௌனத் தில்
சில யாப்புக் குறிப்புகள் :--
ஆர்வலர்களுக்குப் பயன் தரலாம்
--ஆத பாதி காத சேதி ----அடி எதுகை ஆதலால் ஒருவிகற்ப இன்னிசை வெண்பா
வேறு வேறு எதுகையில் பல விகற்ப வெண்பாவும் எழுதலாம்
ஐந்து அடிமுதல் பன்னிரண்டு அடி வரை எழுதப்படும் பஃறொடை வெண்பாவில்
ஒரே விகற்பத்தில் அமைப்பது கடினம்
எதுகை ஓசையால் அமையும் மோனை எழுத்தால் அமையும்
எதுகை மோனை தொடை எனப்படும் பாவின் அழகு
இவையின்றியும் பா சொல் பொருள் அழகால் சிறப்புறும்
இவையிரண்டும்தான் இயலுக்கு மிகவும் முக்கியம்
---ஆ அ மோனை பா க இனமோனை (க ச ட த ப ற --வல்லினம் ) கா க மோனை சே தி இனமோனை
1 3 ஆம் சீரில் அமையும் மோனை பொழிப்பு மோனை .எதுகையும் மோனையும் எட்டுவகை உண்டு
நாலடி பா பாவினப் பாடலில் பொழிப்பு மோனை அமையப் புனைவது தொன்னூல் வழி