நான் வாங்கிய ஆஸ்கார்...
அம்மா...........
இந்த வார்த்தை சொல்லும் போது...
என் அறை முழுதும் தாய் வாசம் வீசுதம்மா ...
உன் வயிற்று பசி பொறுத்து ..
என் பசி அடைத்தது ஒரு நாளா.. இரு நாளா...
என் அறிவு பசியை காலமெல்லாம் கொளுந்தருல விட்டது நீதானம்மா..
சிறு வயதில் நான் பட்ட காயங்களுக்கு ...
படுக்கையில் எனை கிடைத்தி..
உன் விழியில் விளக்கேத்தி
எனக்காக.. காவலனாய்..இருந்தாயம்மா...
மூணாம் வகுப்பில் நான் எடுத்த முதல் மார்க்கிற்கு
நீ கொடுத்த அந்த நெற்றி முத்தம்..
நான் வாங்கிய முதல் ஆஸ்காரம்மா.
என் தலை கோதி நீ சொன்ன அறிவுரைகள்..
அந்நாளில் போரடித்தாலும்..
அந்த அர்த்தம் எண்ணி அமைதியா நின்றேனம்மா..
தாய் படும் கஷ்டம் , தாய் பட்ட கஷ்டம்..
உன் மனம் இஷ்டப்பட்டு பட்ட கஷ்டம்..
வரிகளில் எழுத .. வார்த்தைகள் கிடைக்கலை..
கண்ணீரில் எழுத நினைத்தாலும் ..
அங்கேயும் வருகுது உன் கைகள் என் கண்ணீரை துடைக்க...
பொய்யில்லா உன் முகம் பார்த்து..
உன் மடியில் என் முகம் சாய்த்து..
ஒரு பிடி சோறு உன் கையால் உனக்கும்...
இந்த வாழ்க்கை மட்டும் எனக்கு பிடித்து இருக்கிறதம்மா..
ஆண்டவனுக்கு பிடித்தவங்களுக்கு அன்பான அம்மா இருப்பாங்கன்னு ...
இரவு கதை பல சொல்லி நீ என்னை வளர்த்தே..
உண்மையிலே சொல்ல போனால்..
ஆண்டவனுக்கு என் மேல பொறாமை...
அன்பான அம்மா போட்டியில் ஆண்டவனின் அம்மாவையே நீ ஜெயிச்சதாலே..
ஒண்ணுமே புரியலை..
என்ன தவம் செஞ்சேன்..
நான் என்ன தவம் செஞ்சேன்..
உன் கருவறையிலே சில மாசம் இருந்து...
உன் பாச பரிவறையிலே பல வருஷம் வாழ..
நான் என்ன தவம் செஞ்சேன்..