உன் ஆசிரியன்.
வாழ்வில்
கற்றுக்கொள்ள பல வழிகள்.
கேட்டு கற்பது,
படித்து கற்பது,
இதில் இன்னொன்று உண்டு.
பட்டு கற்பது.,
மனிதனுக்கு
ஆசிரியர்கள் பலர்.
தாய் ஒரு ஆசிரியை,
தந்தை ஒரு ஆசிரியர்,
சகோதரர் ஒரு ஆசிரியர்,
சகோதரி ஒரு ஆசிரியை,
மனைவி ஒரு ஆசிரியை,
தோழன் ஒரு ஆசிரியன்,
உன் பள்ளி கல்லூரி
ஆசிரியரும் கற்பிக்கிறார்.
ஆனால் முழுமையான
ஆசிரியர் என்பவர்
நம் அனுபவமே.,
அது கற்ப்பிக்கும் விதம் போல்
ஒருவரும் கற்பிப்பதில்லை.,
இல்லையெனில் - அது
புரிய வைக்கும் விதம்
எவரும் செய்வதில்லை.
உனது அனுபவங்களை
பாடமாக எடுத்துக்கொள்.,
வாழ்வு சிறக்கும்.