ஒரு வரி ... ஒரு புள்ளி
ஒரு வரி.
ஒரு புள்ளி.
அப்பா.
என் வாழ்க்கையின்
அர்த்தங்களை
ஆழமாக்கியவர்.
என் தேவைகளை
உணர்ந்தவர்.
எனக்கு உணவு
பரிமாறப்பட்டிருக்கும்,
நீங்கள்
பசியாய் இருப்பீர்கள்.
என் தோல்விகளின் போது
தூரத்தில் நின்று
அழுது கொண்டு
இருப்பீர்கள் .
அருகில் வந்து
ஆறுதல்
சொல்வீர்கள்.
என் பெயரை
அர்த்தபடுத்த
இன்னும் எவ்வளவு
தியாகம் இருக்கிறதென்று
உங்களுக்கும் தெரியாது...
எனக்கும் தெரியாது...!
ஏன் நான்
உங்களை போல்
இல்லை?
சுயநலக்காரன் – நான்.
நான் பிறந்தது
முதற்கொண்டு
ஒவ்வொன்றாய்
அறிமுகப் படுத்தினீர்கள்...
காதலை
நானே தெரிந்துகொண்டேன்..
எனக்கு உங்களால்
கற்பிக்கப் படாததால்
தோற்றேன்...
உங்கள் கண்ணீருக்கு
நிறைய விளக்கங்கள்
எனக்கு தேவைப்படாது ..
காரணம் – நான் மட்டும் தான் .
உங்கள் இதயம்
பழுதடைந்தும் கூட
எனக்காக
துடித்து கொண்டிருக்கிறீர்கள்...
யாருக்கு தெரியும்?
நான் உங்களின்
போன ஜென்மத்து
பாவமாய் கூட
இருக்கலாம் ...!
என் வாழ்க்கையை
எழுத
அதிக பக்கங்கள்
தேவை இல்லை .
ஒரே பக்கம்.
ஒரே வரி.
ஒரு முற்றுப்புள்ளி ....
அப்பா.
- எபி.