குமுறல்கள்
கருவறையீலே
உன்
மனதை கல்லாகி இருத்தல்
இன்று
நான்
ரத்தைத்தை புசிக்கும்
மனித மிருகமாக இருந்திரூக்க மாட்டேன்!
பணத்தை மட்டுமே
தேடி ஓடும்
பாசத்திற்காக ஏங்கும்
பிச்சைகாரனாய் இருந்திரூக்க மாட்டேன்!
குப்பை தொட்டிக்குள்
கிழிந்த
பக்கங்களாய்
கிடந்த நான்
இன்று ....
செய்திதாள்களில்
தினம் தினம்
வந்து போகிறேன் !
காந்தி பிறந்த மண்ணில்
கோட்சே போல்
நான்
நடமாடி கொண்டிருக்கிறேன்!
நீதி தேவதையே!
தண்டனையை
தடையேல்லாமல் கொடு!
எனக்கல்ல!
என்னை போன்றவர்களை
உருவாக்கும் பேய்களுக்கு!
அப்படியாவது
புதிய காந்திகள்
பூமியில் பிறக்கட்டும்!!