அனாதையின் கேள்வி..?
அழகு...மலர்களுக்குகூட.....,
ஆசை..வண்டுகள் உண்டு.....!
இனிய..பழங்களுக்குகூட...,
ஈக்கள்...உண்டு மொய்க்க....!
உற்றார்கள் என எல்லாவற்றிற்கும்...உண்டு..,
ஊட்டி...வளர்க்காத...வளர்ப்புகள் நாங்கள்.....!
எங்களுகென்று...யாரும்.....உற்றாறிலை....?,
ஏனென்று...கேட்பாருமில்லை.......?,
ஐயோ...!, கொடுமையிது.....!
ஒவ்வொரு..நாளும் ,ஒருவேலையே உண்டு -அதனால்...,
ஓடாய்...போனதுண்டு.....!
ஒளவையாகும்...வரை, வாழத்தான் வேண்டுமா...?