50 பைசா செலவில் ....சூரிய ஒளி பாட்டில் பல்பு
நம்புங்கள்... வெறும் 50 பைசா செலவில் உங்கள் வீட்டில் 40 வாட்ஸ் பல்ப் எரியுமென்றால் தயவு செய்து நம்புங்கள்.. இந்தோனேசியாவில் பல லட்சம் வீடுகளில் , பகல் நேரத்தில் இன்று இதுதான் வெளிச்சத்தை தந்து கொண்டிருக்கிறது... நிஜம்தான்... ! மின்சார வசதியில்லாத பிலிப்பைன்ஸ் மற்றும்
இந்தோனேசியாவின் குறுகலான தெருக்களில் உள்ள வீடுகள் பகல் நேரத்தில் கூட கும்மிருட்டாக தான் இருக்கும் ... இந்த வீடுகளிலெல்லாம் இன்று இந்த பல்புதான் ஒளியை வீசிக்கொண்டிருக்கிறது... !
சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்னர் பிரேசில் நாட்டு என்ஜினியர்
ஒருவர் தன்னுடைய காலியாக இருக்கும் தொழிற்சாலையில் பைசா செலவில்லாமல் வெளிச்சம் வர வைக்க முடியுமா என்று விளையாட்டாக முயற்ச்சித்துப்பார்க்க .. கண்டுபிடித்ததுதான்
இந்த சூரிய ஒளி பாட்டில் பல்பு.
வெறும் காலி பெப்ஸீ பாட்டில் ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள்.
சுத்தமான தண்ணீரால் அதை முழுவதுமாக நிரப்புங்கள் . 2 டீஸ்பூன்கள் ப்ளீச்சிங் பவுடர் சேர்த்துங்கள். மூடியை இறுக்க மூடுங்கள்... மூடி சூரிய ஒளியில் உருகாமல் இருக்க மேலெ எம் சீல் கலவையை தடவுங்கள்... சூரிய ஒளி பாட்டில் பல்பு ரெடி... !
பகல் நேரத்தில் விளக்கில்லாமல் போனால் இருட்டாக இருக்கும்
சிமெண்ட் சீட் கூரை வேய்ந்த அறைகளில் அந்த பாட்டில் நுழையுமளவுக்கு ஒரு துளை வட்டவடிவத்தில் ஏற்படுத்துங்கள். 1 1 அடி சைசில் சிமெண்ட் சீட்டில் பொருந்துகிற மாதிரி சிறியதான ஒரு இரும்பு சீட்டில் வட்ட வடிவ துளையொன்றை தண்ணீர் பாட்டில் டைட்டாக பிடித்துக்கொள்கிற மாதிரி ஏற்படுத்தி, அதை மேலும் இறுக்க பிடித்துக்கொள்ள பாட்டில் கீழே விழாத அளவிற்கு அரால்டைட் அல்லது எம் சீல் மிக்ஸ்
கொண்டு பாட்டிலில் தடவி பொருத்தினால் போதும். அதை சிமெண்ட் சீட் கூரையில் ஏற்படுத்தப்பட்ட துளையோடு பொருத்தி விடுங்கள். சுற்றிலும் திரும்பவும் இந்த மிக்ஸ் தடவி விட மழை பெய்தாலும் உள்ளே ஒழுகாது... !
சூரியன் மறைந்து 7 மணி ஆனாலும் கூட ஒளிச்சம் குறையாதென்றால் அதிசயம்தான்... !
பகல் நேரத்தில் வீடுகள், தறி குடோன்கள் , ஸ்டாக் ரூம்கள் போன்றவற்றில் வீணே எரியும் மின்சார விளக்குகளை அணைத்து இந்த சூரிய ஒளி தண்ணீர் பாட்டில் விளக்குகள் மூலம் எரிய செய்ய எத்தனை யூனிட் மின்சாரம் மிச்சமாகும் தெரியுமா.... ???
25% சதவீதம் வரை மிச்சப்படுத்த முடியும்... !!!!! பல்பு வாங்கும் செலவும் இல்லை.... கரண்ட் கட்டென்றாலும் கவலையே இல்லை.... !!
Pls visit
http://withfriendship.com/videos/Widad/solar-light-with-no-cost-isang-litrong-liwanag.php