இன்பம் - 384

பொருட்பால்
...........................
அரசியல்
..............................
இறைமாட்சி
..................................................................................
அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு.

கவிதையாய் பொருள்
..................................................................................

தமக்குரைத்த அறத்திலிருந்து பிறழாது
தன்நாட்டில் தீதறம் நேராது
வீரத்தின் முடிவேதும் தவறாது
விவேகத்தின் மானத்தை மதிப்பதரசு.
=======================================
இன்பம்மென்று முரைப்பேன் திருக்குறள் தெளிந்தால்
இல்வாழ்வில் மீண்டு இனிபிறவிபயனை அறுப்போம்
========================================

எழுதியவர் : அதி. இராஜ்திலக் (4-Nov-11, 9:58 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 275

மேலே