நம் தமிழ் திரு தாய் நாடு

மண் கொண்ட உடலை மிதித்து
நம் கண் கண்ட பூமியில்
கால் பாதிக்கும் குழந்தை தமிழ்
அம்மா

புண்பட்ட நெஞ்சத்தில் புது
புன்னகை பூக்கும் வீர ஒளி
அம்மா

அம்மா என்று சொல்லில்
இந்த அகிலம் ஊர்வதால்

நம் அனைவரும் ஒன்றே என்று
அகிம்சை போற்றும் நொடியில்

ஊரும் தமிழ் உலகை சுற்றியும்
பேசும் தமிழ் நாட்டை சுற்றியும்

வாடா தமிழாய் வான் சென்று
வையம் கண்டு தேன் கொண்ட

தமிழனாய் தென்னாடு கண்டு
பொன்னாடு போற்றும் நம் நாடு
நம் தமிழ் திரு தாய் நாடு









எழுதியவர் : hishalee (5-Nov-11, 3:56 pm)
பார்வை : 1957

மேலே