(எதிர்)நீச்சல்
என் சிறுவயதில்
மழலைகள் விளையாடும் மாலைப்பொழுதில்
என் தந்தை
எனை அழைத்துச்செல்வார்
நீர்மிகுநிலப்பரப்பில்
கைகளால் நீரை அகற்றவும் சொல்வார்
கால்களால் எட்டி உதைக்கவும் சொல்வார்
தலையை நீர் மேல்நீட்டி நிறுத்தவும் சொல்வார்
நடுநடுவே மூச்சை பிடித்து மூச்சுவிடவும் சொல்வார்
பயிற்சிகள் பல கொடுத்தும் - அன்று
முயற்சியில் என்னால் முடியாதுபோனது
காற்றடைத்த பந்துபோல் நீரில்மிதக்க எனக்குத் தெரியாதுபோனது
இன்று
வயது முப்பதானாலும்,
தகுந்த இடமும், வாய்ப்பும் அமையும்போதெல்லாம்
முயற்சிவிடாது நான் பயில - கற்றுக்கொண்டது
இருபது அடிதூரம் நீரின் உள்நீந்துவது!