முழுமை அடையாமல்
ஒன்று ஒன்றாய்
ஆறு ஒன்று இன்று
அதனால் என்ன ?
நல்லது நடக்கும்
அப்படியா !
எந்த விஞ்ஞானி சொன்னார்?
இல்லை ! இல்லை
சோதிடர் சொன்னார்
குறை மாதத்திலேயே
கர்ப்பிணிப்பெண்
வயிற்றைக் கிழி!
கிழித்து குழந்தையை
எடு !
இந்த நாளில்
குழந்தையை
எடுத்தால் ஐஸ்வரியம்
பொங்கும் !
எதுவும் பொங்காது
முழுமை அடையாமல்
குழந்தையை எடுத்தால்
மூளை ஊனமாகலாம்
மருத்துவர் அறிவுரை
சோதிடத்தால்
மூளை ஊனமானோர்
அஞ்ஞானத்தால்
குழந்தையை
ஊனமாக்கும் கொடுமை
மறையுமா?