தாய் நாட்டு பாடல் ...!

வள்ளுவன் தந்த வளம் நாடு
வான் புகழ் கொண்ட பழம் நாடு
எண்ணிய குறளடி பாடிய நாடு
ஏழ்கடல் புகுத்திய திரு நாடு
பெண்ணியர் ஆண்ட புண்ணிய நாடு
பேர் புகலும் கண்ட பாரதி நாடு
அந்நியர் ஆளும் அகிம்சை நாடு
ஆறும் ஐந்து அடங்கிய அற்புத நாடு
பொன்னும் பொருளும் செழிக்கும் நாடு
போதனை புகட்டும் நல் பொன்னாடு
தீதும் தாரா திவ்விய நாடு
தீயவர் யாவருக்கும் நன்மை புகட்டும் நாடு
வாழ்தல் வேண்டி வருவோருக்கு வருகை நாடு
வாழ்க்கை தரத்தை உயர்த்தும் இந்திய நாடு
நம் தாய் நாடே தலை சிறந்த தமிழ் நாடு

எழுதியவர் : hishalee (12-Nov-11, 11:53 am)
பார்வை : 551

மேலே