இன்றைய குழந்தைகள் தினத்திற்கு
சின்ன குழந்தைகளே
செல்ல செல்ல அமுதே
சொல்லும் குரலிசையால்
குயில் கொஞ்சும் நிலவே
பூங்கொடி வளர்கின்ற
இமயத்தின் சாரலாய்
வீசிடும் தென்றலில்
மொழி பேசிடும் பொய்கையே
சின்ன குழந்தைகளே
செல்ல செல்ல அமுதே
வானையும் தொட்டு நாம்
விளையாடுவோம் வாருங்கள்
விண்மீன்களை எண்ணித்தான்
புது கோளில் நாம் வாழலாம்
சின்ன குழந்தைகளே
செல்ல செல்ல அமுதே
ஒன்று நாம் கூடலாம்
நன்று ஒன்றே செய்யலாம்
தீது ஏதும் நேராமல்
ஓதும் நீதியில் நிற்கலாம்
பகுத்திடும் அறிவினில்
பண்பினில் நிற்கலாம்
கொடுத்திடும் குணத்தில்
கொண்டாடி நாம் மகிழலாம்.
சின்ன குழந்தைகளே
செல்ல செல்ல அமுதே