இன்பம் - 394

பொருட்பால்
..............................
அரசியல்
..............................
கல்வி
..........................................................................................
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
.........................................................................

கவிதையாய் பொருள்
..................................................................................
இன்பமோடு கூடி மகிழ்ந்து-இனி
எப்போது நாம் காண்போமென்று
மனம் கலங்கி ஏங்குமாறு பிரிதல்
மாண்பு கொண்ட கற்றவர் செயலாம் .
=======================================
இன்பம்மென்று முரைப்பேன் திருக்குறள் தெளிந்தால்
இல்வாழ்வில் மீண்டு இனிபிறவிபயனை அறுப்போம்.
========================================

எழுதியவர் : அதி. இராஜ்திலக் (15-Nov-11, 9:29 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 289

மேலே