ஒவ்வொரு பிகரும் தேவை மச்சான்....
கண்ணால் பல
கவிதைகள் பேசுவாள்
கண்ணகி ஒருத்தி !
மந்தாரமாய் மனம்
வருடி செல்வாள்
மாதவி ஒருத்தி !
வானவில் வண்ணமாய்
எண்ணத்தில் ஓடுவாள்
வானதி ஒருத்தி !
நடைதனில் நளினமாய்
இடையினை ஆட்டுவாள்
நந்தினி ஒருத்தி !
ரம்யமாய் நம்மை
ரசிக்க வைப்பாள்
ரம்பை ஒருத்தி !
ஊமை நெஞ்சினில்
ஊசி ஏற்றுவாள்
ஊர்வசி ஒருத்தி !
மேகமாய் வந்து
தாகமூட்டுவாள்
மேனகை ஒருத்தி !
தாகமேற்றியே
தண்ணி காட்டுவாள்
தாரகை ஒருத்தி !
ஓரப் பார்வையில்
ஒளிதனை ஏற்றினாள்
ஓவியா ஒருத்தி !
கள்ளச் சிரிப்பினில்
கலவரமூட்டினாள்
காவியா ஒருத்தி !
மோகப்பேய்போல்
மூர்சையாக்குவாள்
மோகினி ஒருத்தி...
காமத்தீயினில்
கலவரமூட்டுவாள்
காமினி ஒருத்தி !
தேனிலும் மேவிய
தீம்சுவை போன்றவள்
தேன்மொழி ஒருத்தி ,
பூவிலும் மெல்லிய
பாரமும் தாங்கிடா
பூங்கொடி ஒருத்தி,
காதலியை மட்டும்
நித்தமும் நினைத்து
பித்தம் ஏறி பிதற்றுவதை விட ......
காணும் மங்கையர்
எழில்கண்டு
கவிதைகள் புனையும் ,
கவிஞனாய் வாழ்ந்துவிடுவதே
என்றும் சிறப்பு ! - ஆதலால்
வைக்கப்பட்டது இந்த தலைப்பு........
+++++===== ஒவ்வொரு பிகரும் தேவை =====+++++
----------------------- மச்சான் ----------------------