பாதைகள் நிஜமல்ல

இசை தான் துணையானது ...
உன் நினைவிற்காக ..
கனவுதான் கைவசமானது ....
உன்னோடு வாழ...
கவிதைதான் உருவானது ..
உன் நினைவுகளை பதிவு செய்ய ..
மனசுதான் அசை போட்டது ...
உன்னோடு பேச ...
கண்கள் தான் அணை போட்டது ..
உன்னை பாதுகாக்க ..
கண்கள்தான் திசைமாறியது ...
உன்னோடு பயணம் செய்ய ...
மௌனம் தான் நிலையானது ...
நீ திசைமறியபோது...
தனிமைதான் சுகமானது ...
நீ பிரிந்து சென்ற போது...

எழுதியவர் : கே. அமுதா (18-Nov-11, 3:03 pm)
பார்வை : 325

மேலே