நினைவின் ஆலயம்

பிறக்கும் நினைவுகள் அனைத்தும் - நாம்
பிறத்திலிருந்து இவ்வுலகில்
நிழலாய் நினைத்து உறங்குகின்றன
நினைவின் ஆலயமாம் இதயத்தில்

அகிலத்தில் உதித்திலிருந்து – நம்
ஆயுள் முடியும் வரை
அறிமுகமாகம் முகங்கள் அனைத்தும்
பதியும் நினைவாய் இங்கே

வாழ்வுதனில் தோன்றும்
வாத்தையால் சொல்ல முடியா
இதயத்தை குளிர்விக்கும்
இனிய நினைவுகளின் ஆலயம் இது

சொல்லண துன்பங்கள் - யாரிடமும்
சொல்ல முடியா போதிலும்
பொக்கிஷமாய் இங்கே
பொதிந்து கிடக்கும் நினைவாய்

எதையும் தாங்கி நிற்கும்
எளிமையான நண்பன் இவன்
இவனுமோர் ஆலயம் தான் - உயிர்
இருப்பதும் இவனால்தான்

வலிமை நிறைந்ததும்
வண்ணங்கள் சேந்ததும் - கிடைக்கும்
வரப்பிரசாதமான நினைவுகளும்
வாழ்வது இங்கேதான்

கனவுகளின் களஞ்சியம்
காலத்தின் உயிரோட்டம்
வாழ்வின் வனச்சோலை – எல்லாம்
நினைவுகளின் ஆலயமே

எழுதியவர் : கஜன் (18-Nov-11, 3:16 pm)
சேர்த்தது : கஜன்
பார்வை : 217

மேலே