பால் விலை எவ்வளவு ? பஸ் டிக்கெட் அவ்வளவு

வணக்கம் : கவிதை
தலைப்பு : என்ன ஆகுமோ உலகம்

உலகம் எங்கே போகுது
அதில் பால் விலை இரண்டாய் தினம் கூடுது
ஏழைகள் கண்ணீரில் கருப்பாய் (Tea) டீ போடுது
கேட்டால் இனிமேல் அதுதான் என்று கூறுது

பஸ் கட்டணம் ரொம்ப உயருது
ஏழைகள் கூலி பணம் அதில் ஓடுது
மக்கள் மனது காயம் ஆகுது
என் இதயம் ரொம்ப வலிக்குது
அதில் தானே தினம் தினம்
ஏழை வாழ்க்கை நடக்குது
அதில் தானே ஏழை பசி ஆறுது

மூன்று மாத குழந்தை பால் கேட்குது
பணம் யில்லையே , தண்ணீர் குடிக்குது
உலகம் எப்படி நடக்குமோ இனிமேல் என்று காக்கைகள் நினைக்குது.............

நன்றி
தினம் தினம் உங்கள் அன்பில் மலரும்
மணியான்

எழுதியவர் : மணியான் (19-Nov-11, 7:48 am)
பார்வை : 336

மேலே