வழி விடுங்க! வழி விடுங்க! எங்க அண்ணன் வருகிறார் {உரையாடல்}


நானும் அண்ணன் மோகன் தாஸ் காந்தி
அவர்களும் இதுவரை சந்தித்ததில்லை,
ஒருவேளை சந்தித்திருந்தால்...................
குறிப்பு: கதையில் வரும் உரையாடல் வெறும் கற்பனையே யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் படைக்க வில்லை.....
சிரிப்பு வந்தா சிரிங்க சீரியஸா எடுத்துக்காதீங்க.......
===============================================

அண்ணன்: தம்பி சதீஷா வா தம்பி வா வா
நான்:இதோ வரேன்னே...எப்படின்னே இருக்கீங்க?

அண்ணன்: நான் ஆஸ்பிடல் ல இருந்து வந்தேன்னு யார்ரா சொன்னது... என் பொண்டாட்டி தானே,
அவ சொல்லி இருப்பா....

நான்: என்னண்ணே பேசுறீங்க ஒன்னும் புரியலையே....
அண்ணன்: பின்ன என்னடா வந்த உடனே எப்படி இருக்கீங்கன்னு கேட்ட எனக்கு உடம்புக்கு முடியலயுன்னு அவ தானே சொல்லி இருப்பா.....

நான்: அண்ணன் உங்க கால் எங்கண்ணே இருக்கு???
அண்ணன்: நீ எப்படி இருக்க????
நான்: எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைண்ணே
அதனால ரொம்ப சந்தோஷமா இருக்கேன்

அண்ணன்: ஏன்டா கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே....
நான்: அடபோங்கன்னே உங்களுக்கு எப்பவும் விளையாட்டு தான்...உங்கள பாத்தபிறகும் எப்படின்னே கல்யாணம் பண்ணிகுற ஆசை வரும்"

அண்ணன்: முறைக்குறார்???????????????
அண்ணன்:சரி வாடா தம்பி வீட்டுக்கு போவோம்...
நான்:போகலம்னே.... (வீட்டிற்கு போகிறோம்)

அண்ணன்: எங்கடா இவள காணோம்??
நான்: யாருங்கண்ணே அண்ணியவா தேடுறீங்க...
அண்ணன்:ஆமா டா தம்பி... சரி நீ சப்பிட்டுன்னு இரு நான் குளிச்சிட்டு வந்திடுறேன்...

நான்:நெசமாவான்னே சொல்றீங்க....
அண்ணன்: ஆமாலே தம்பி நெசமாதான்யா குளிக்க போறேன் சுத்தம் சோறு போடும்டா...
நான்: அப்போ கொழம்பு யார்னே ஊத்துவா?????
அண்ணன்:(முறைத்து கொண்டே குளிக்க போகிறார்)

{நான் சாப்பிட்டு கொண்டிருக்கிறேன் அண்ணன் குளிக்க போகிறார்} {நெஜத்துல எப்படியோ தெரியாது கதையில உண்மையிலேயே குளிக்க தாங்க போறாரு}
(தூரத்துல ஒரு மொனகள் சத்தம் அது தாங்க அண்ணி)

அண்ணி:என்னங்க என்னங்க எங்க இந்த மனிஷன காணோம்....
அண்ணன்:என்னடி சும்மா பொலம்பினு இருக்க...
அண்ணி:அது உங்கள கட்ன நாளுல இருந்து பொலம்பினு தானே இருக்கேன்....
அண்ணன்:????????????
அண்ணி:அத விடுங்க... யாருங்க அது நாய்க்கு வெச்ச சாப்பாட்ட வேர்வை தண்ணி ஊத்த ருசிச்சு சாப்பிட்டுன்னு இருக்கிறது.....
அண்ணன்:அடிப்பாவி மகளே நாய்க்கு வெச்ச சாப்பாடா அது.... இத ஏன் டி முதல்ல என்கிட்டே சொல்லல....
அண்ணி:அட அதான் சொன்னேனே நாய்க்கு வெச்ச சாப்பாடுன்னு பின்ன உங்க கிட்ட எப்படி சொல்றது நாய்க்கிட்ட தானே சொல்லணும்......

அண்ணன்: (mind voice உனக்கு இது தேவையா)
மெதுவா பேசு டி அவன் காதுல விழ போகுது....
அண்ணி: என்னங்க யோசிக்குறீங்க?????
அண்ணன்:இல்லடி நாய் சாப்டாலே நாலு மாசம் எந்திரிக்காதே பாவம் இப்படி வசமா வந்து மாட்டிகிட்டானே......

அண்ணன்:என்னடா தம்பி சாப்டியா???
நான்:சாப்ட்டேன்னே அருமையா இருந்துச்சு அண்ணி சமையல்....
அண்ணன்:டே தம்பி பொய் தானே சொல்ற....
நான்:(mind voice அட கண்டுபுடிசிட்டாரே) அட இல்லனே நெஜமாவே சூப்பரா தானே இருக்கு....
அண்ணி நல்ல இருக்கீங்களா அண்ணி...

அண்ணி:ம்ம்ம் நல்ல இருக்கேன்ப்பா...
நான்: ஒரு சந்தேகம் அண்ணி எதிர்த்த வீட்டு ஆண்டி பேரு என்ன அண்ணி
அண்ணி:வனிதா பா......ஏன் கேக்குற....
நான்:அதான்னே பாத்தேன் அவங்க பேரு வனிதா நு நான் சொன்னேன் அண்ணி அது தெரியாம அண்ணன் அவங்கள டார்லிங் நு கூப்பிடுறாரு
அண்ணி...

(அண்ணி முறைத்து கொண்டு போகிறார்கள் அண்ணனின் mind voice டேய் தாசா அவன் எங்கயோ தானடா இருந்தான் அவன கூப்பிட்டு வந்து இப்படி சொந்த செலவுலேயே சூனியம் வெச்சிக்கிட்டியே டா....)

அண்ணே உங்க தத்துவத்த கேட்டு ரொம்ப நாள் ஆச்சுன்னே ஒன்னு எடுத்து விடுங்க பாப்போம்...

அண்ணன்:{அண்ணிய பாக்குறாரு பார்த்து மொனகுறாரு இவ இருக்கும் போது சொன்னேன் அப்புறம் ராத்திரி நமக்கும் அந்த சாப்படையே கொடுத்துருவா} நீ வாடா நாம வெளிய போயி பேசுவோம்.....

நான்:சரி வாங்கன்னே போவோம்...
வெளியில் ஒரு டீ கடை வாசலில்.....
என்னண்ணே அன்னிக்கு உங்கமேல கொள்ள ஆசையாண்ணே...

அண்ணன்:அவளுக்கு என்மேல கொள்ள ஆசை இல்லடா தம்பி... என்னையவே கொல்ல ஆசைடா.... ஆசையே துன்பத்திற்கு காரணம்னு படிக்கும் போது தெரியலடா உங்க அண்ணி கைய புடிச்சதிலிருந்து தான் டா தெரிஞ்சுது....

நான்:அது நியாயம் தானேன்னே அத விடுங்கண்ணே சொல்லுங்கண்ணே...

அண்ணன்:எதப்பத்தி டா சொல்ல சொல்ற,
நான்:நீங்க சொல்ல போற ஒரு வார்த்த இந்த க(வி)தையே பொரட்டி போடனும்னே....

அண்ணன்: டேய் தம்பி..... ஒரு விஷயம் நல்ல புரிஞ்சிக்கோ டா.....

"கண்ணுல மண்ணு பட்டாலும் சரி
பொண்ணு பட்டாலும் சரி
கண்ல தண்ணி வர்றது நிச்சயம் டா....."

நான்:தெய்வமே???????????????????????????

அண்ணன்: எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா.........

பார்ப்பவரின் கவனத்திற்கு: இக்கதை வெறும் நகைசுவைக்காக சித்தரிக்கப்பட்டது
உண்மையில் எங்க அண்ணன் அண்ணி என்னுயிர் நண்பன் ஈஸ்வரன் தோழி வளர்{வால்}மதி,பிரிந்தா அண்ணன் சங்கரன் இவர்கள் அனைவரும் பழகுவதற்கு இனியவர்கள்
திறமையானவர்கள்..... மேலும் எங்கள் அண்ணனும் அண்ணியும் இரு உடல் ஒரு உயிர் என வாழ்பவர்கள் விருந்தோம்பளுக்கே விக்கல் வருமளவிற்கு இவர்களின் கவனிப்பு இருக்கும்....
படிக்கிறது படிக்குறதா தான் இருக்கணும்
கற்பனை எல்லாம் பண்ணகூடாது ஓகே...

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (19-Nov-11, 8:49 pm)
பார்வை : 2082

மேலே