உரக்கச்சொல்லுவோம் ஜெய்ஹிந்த்
இரவில் கண்விழித்த சுதந்திரம்
வெள்ளை கொக்குகள் வெளியேறிய
பாரதம்
வெள்ளைக்கொடி உயர்த்த சிவப்புக்
குருதி சிந்தியவர்கள் நாம்
மதம் பிடிக்காமல் மனிதம்
பிடித்து இமயத்தின் உச்சியில்
உரக்க ஒலித்த சுதந்திரம்
இறக்கையில்லாமல் இந்திய
உணர்வுகள் வானவெளியில்
பறந்து களித்த சுதந்திரம்
உடலில் வழிந்த குருதிகளை
நெற்றியில் திலகமிட்ட
தியாகச் சுதந்திரம்
கற்ப்பை இழந்த கன்னிப்பெண்ணும்
கணவனை இழந்த விதவையும்
மகனை இழந்த தாயும் சொல்லி
மகிழ்ந்த சுதந்திரம்
கண்ணை தொலைத்து, கை, கால்
இழந்து, காற்றோடு உயிர்கலந்த
வீரன் பெற்றுதந்த சுதந்திரம்
வீர நடைபோட்டு உயர்ந்து நிற்க
படிக்கற்க்களாய் அமைந்த உயிர்களின்
தியாகத்தை உணர்ந்து
உரக்கச்சொல்லுவோம் ஜெய் ஹிந்த்
நாம் உரக்கச்சொல்லுவோம் ஜெய் ஹிந்த்
ஜெய் ஹிந்த்