திருவாத்தானின் நகைசுவை கதை
கார்த்திகை மாதம் ஊரில் பாதி பேர் மாளை அணித்து இருந்தார்கள். எல்லோரும் கோவிலுக்கு போலாம் என்று கிளப்பினார்கள்.அனைவரும் சேர்த்து 49 பேர் இருந்தார்கள் இன்னம் ஒரு ஆள் வேணும் என்று தேடினார்கள் கிடைக்க வில்லை. அந்த ஊரில் திருவாத்தான் என்னும் ஒருவர் இருந்தார் அவரை கண்டல் அனைவரும் ஒரு பயம். அவன் அவன் அனைத்து லொள்ளுதனத்தையும் செய்பவன். அவனும் மாளை அணித்து இருந்தான்.ஆள் கிடைக்க வில்லை என்று அவனை அழைத்து கொண்டார்கள்.50 பெரும் கோவிலுக்கு சென்றார்கள்.
கோவிலுக்கு நடத்தே சென்றார்கள். கொஞ்சம் தூரம் நடத்து வந்தாதும் அனைவரும் பசி ஆனது. அனைவரும் ஒய்வு எடுத்து கொண்டு சமையல் செய்தார்கள். அப்போது ஆளுக்கு ஒரு வேலை வந்தார்கள். திருவாத்தானுக்கு குழப்பு செய்யும் வேலை தந்தார்கள். திருவாத்தான் கருவாடு வாங்கி வந்து மிகவும் பொடியாக அரைத்தான். சமையல் தயார் ஆனது அனைவரும் சாப்பிட அமர்தார்கள். இலை போடப்பட்டு சாப்பாட்டு வைக்க பட்டது திருவாத்தான் ஒவ்வொருக்கும் கருவாடு பொடியே வைத்தான் அது கருவாடு பொடி என்று யாரும் தெரியாது. அனைவரும் நன்றாக சாப்பிட்டார்கள். குழம்பு நல்ல இருக்கிறது என்று அனைவரும் கூறினார்கள். பின்பு மறுபடி நடக்க தொடகினார்கள்.
இரவு தொடக்கியது அனைவரும் ஒரு இடத்தில் தங்கினார்கள். சமையால் தயார் செய்தார்கள். குழப்பு திருவாத்தான் நல்ல செய்வான் என்று அந்த வேலையே மறுபடியும் தந்தார்கள்.. திருவாத்தான் பின்பு செய்தது போலவே கருவாடு வாங்கி அரைத்தான் இப்போது நன்றாக அரைக்க வில்லை. மீனின் தலை, வால் இருக்கும் படி அரைத்தான்.சமையல் தயார் ஆனது அனைவரும் சாப்பிட அமர்த்தார்கள். இலை போடு பரிமாறினார்கள் அப்போது திருவாத்தான் பின்பு போலவே ஒவ்வொருக்கும் கருவாடு பொடி வைத்தான் ஒருவன் என் இலையில் மீன் தலை இருக்கு என்றான் பின்பு ஒருவான் என் இலையில் மீன் வால் இருக்கு என்றான். அனைவரும் அவனை திட்டினார்கள் கோவிலுக்கு போக்கு போது இப்படி பண்ணிட்டனே என்று அனைவரும் குளித்து விட்டு அவனை துரத்தி விட்டு சென்றார்கள். ஆனால் அவன் பின்னாடியே வந்து கொண்டு இருந்தான். இனி இப்படி செயதேனு அவனை கூடவே அழைத்து கொண்டார்கள்.
மறுநாள் காலை உணவுக்காக ஒரு இடத்தில் தங்கினார்கள். திருவாத்தனிடம் இப்போவே இலை கொண்டு வரும் பொறுப்பை கொடுத்தார்கள். அவன் ஓட்டல் கடையில் சாப்பிட்டு போட இலை நன்றாக கழுவி கொண்டு வந்தான். அனைவரும் பாராட்டினார்கள் அவனை இலை எங்கே வாங்கினாய் நல்ல இருக்கு என்று கூறினார்கள்.சாப்பிட்டு முடிந்து அவர்கள் பயணத்தை தொடகினார்கள்.
அன்று மத்தியம் உணவுக்காக ஒரு இடத்தில் தாங்கினார்கள். அப்போது திருவாத்தானுக்கு இலை கொண்டு வரும் பொறுப்பை கொடுந்தார்கள்.
பின்பு போலவே ஓட்டல் கடைக்கு போய் எச்சி இலையே கொண்டு வந்து ஒழுக்காக கழுவாமல் கொண்டு வந்தான். அனைவரும் சாப்பிட அமர்தார்கள். இவன் இலை போடன் அப்போது ஒருவன் என் இலையில் ஒரு பருப்பு உள்ளது என்றன் பின்பு ஒருவன் என் இலையில் ஒரு சாதம் உள்ளது என்றன். அனைவரும் அவனை திட்டினார்கள். கோவில் போய் வந்து உன்னை கவனிச்சுகிறேனு அனைவரும் சொன்னார்கள்.
கோவிலுக்கு கொஞ்சம் தொலைவில். இரவு நேரம் தங்கி போலாம் என்று தங்க இடம் தேடினார்கள். ஒரு விவாசாய் வீடு தெரிந்தது. அவரிடம் இன்று தங்க இடம் கேட்டார்கள். அவர் தாரளமாக தங்கி கொள்ளுகள் என்ற. அனைவரும் உறகினார்கள் நள்ளிரவு திருவாத்தான் எழுத்தான். மாடு கத்துவது போன்று கத்தினான். விவாசாய் மாடுதான் தாகத்தில் கத்துகிறது என்று அவன் எழுத்து மாடை பார்க்க போய் விட்டான் அந்த சமயம் திருவாத்தான் அவர் மனைவியே பக்கத்தில் போய் படுத்து கொண்டான். என் கணவன்தான் என்று அவளும் படுத்து உறகினால். அப்போது மின்சாரம் கிடையாது விளக்குதான். மாடை பார்க்க போனவன் திருப்பி வந்தான். தன் மனைவி அருகில் யாரோ படுத்து உள்ளார்கள் என்று அவன் தீ பேட்டியே தேடினான். அது கிடைக்க வில்லை. அந்த 50 பேரில் ஒருவன்தான் இருக்கனும் என்று அருகில் இருந்த சத்தனத்தை எடுத்து அவன் நெற்றில் தடவி கொண்டே மூன்று நாமம் போடன் கலையில் எவன் நெற்றியில் இந்த நாமம் இருக்கிறதா அவன் தான் மனைவியின் அருகில் படுத்தாவன் என்று நினைத்து கொண்டு அவன் வேறு இடத்தில் போய் படுத்து கொண்டான். அவன் துங்கியதும் திருவாத்தான் எழுத்து அருகில் இருந்த சத்தனம் எடுத்து அதில் எச்சை துப்பி குழப்பி மீதி இருந்த 49 பேருக்கும் நாமம் போடன்.
காலை விடித்தது விவசாய் எழுத்து வந்து இரவில் தன் மனைவி அருகில் படுத்தது யாரு என்று பார்க்கலாம் என்று வந்தான் ஆனால் அனைவர் நேற்றிலும் நாமம் இருந்தது கொஞ்சம் குழப்பி போனான்.பின்பு அதனை விடு விட்டான். அனைவரும் கோவிலுக்கு சென்றார்கள் தெய்வத்தை வணகினார்கள்.
[ என் இனிய நன்பார்களே இது என் தாத்தா சொன்ன கதை அவர் இன்று உயிரோடு இல்லை ஆனால் அவர் சொன்ன கதைக்கு நான் உயிர் கொடுக்கிறேன்]