அந்த ராத்திரி !!!
இருள் கவ்விய
இரவின் இடைவெளியில்
பணக்காரன் திருடனுக்காகக்வும்
திருடன் போலீசுக்காகவும்
பயந்து கொண்டிருக்கையில்
நிதானமாய் நேர்மையாய்
நடக்குமொரு கலவி
அவசரமாய் துரோகஞ்சுமந்து
நடக்குமொரு கலவி
ஓருயிர் ஜனித்துக்
கொண்டிருக்கும் வேளையில்
இன்னொருயிர் மரித்துக் கொண்டிருக்கும்
ஒரு ரகசியம் பிறக்கும்
இன்னொரு ரகசியம்
அம்பலமாக்கப் பட்டுக் கொண்டிருக்கும்..!!
விடியல் பிறந்தவுடன்
பயம் துரோகம்
ஜனனம் மரணம்
ரகசியம் அம்பலம்
அத்தனையையும் தனக்குள்
சுருட்டிக் கொண்டு
செத்துப் போயிருக்கும் அந்த ராத்திரி !!!