காதலனின் மேகதூது
ஏ கடலே!
மன அலைகளின் ஆங்காரமோ உன் ஓங்கார ஒலிப்பு,
புரையோடும் கண்ணீரோ உன் நுரைகள்,
எண்ணங்களின் நீட்சியோ உன் கொள்ளளவு,
நினைவுகளின் சேகரிப்போ உன் மணற்கற்கள்,
மனதின் பிரதிபலிப்போ உன் வண்ணக்கோலம்,
மனதின் மனிதமோ உன் உயிர்கள்,
மனதின் மிருகமோ உன் பேராழி அலைகள்,
மனதின் கலங்கமோ உன் உவர்ப்பு,
கடவுளின் நிலையோ உன் உருவம்,
மனதின் காதலோ உன் ஈரக்காற்று,
காதலின் ஊடலோ உன் வெப்பக்காற்று,
காதலின் ரகசியமோ உன் ஊதக்காற்று,
அடடா,
நிலாப்பெண்ணின் முழுமதி கண்டு துள்ளி குதிக்கிறாய்
அவளின் சுழிமதி கண்டு பொங்கி எழுகிறாய்
என் நிலாப்பெண்ணின் முழுமதி காண
துடிக்கும் இதயத்தின் முன் நீ துளிதான்!
நீ உன்னையே தழலுக்கு இரையாக்கி
நிலாப்பெண்ணுக்கு மேகதூது விடுகிறாய்
அவள் கற்பனைக்கும் தூதுவிட்டு
அவளின் மூன்றாம்பிறையாவது காட்டச் செய்வாய்!!!!