கண்கொள்ளா அழகு
 
            	    
                உதிக்கும் தழலை
		நினைவுப்படுத்தும் நுதலும்,
மூன்றாம்பிறையும் நாணி
		முகிலுள் ஒளியும் பிறையும்,
பூவிழி மூடிய
		வண்ணத்துச் சிறகும்,
உட்செலும் தென்றலை என்னுயிர் 
		கீதமாய் மாற்றும் இருதுளை குழலும்,
அமுததேன் சுரபியும் முத்துகளும்
		கொண்ட சிப்பியும்,
என்னிதழ் ரேகைகள் கொண்ட
		பனி இதழுமென,
நீ துஞ்சும் அழகு
		கண்கொள்ளா நிலவு!
	    
                
