பெரிய பரப்பில் சிறிய எண்ணம்

வணக்கம் : கவிதை
தலைப்பு : பெரிய பரப்பில் சிறிய எண்ணம்

மீன்தொட்டி போலவே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் கடலிலும்,

என்னை விடுவித்த போதிலும்
ஒரு சுற்று புறத்தையே சுற்றி வருகிறேன்

கடல் மீன் எனும் பெயர் கொண்டு நான்?

காதலியும் கிடைத்தால்
நல்ல நண்பர்களும் கிடைத்தார்கள்
என்னை அழைத்தார்கள் போக முடியவில்லை
அவர்களுடன், போக வழிகள் தெரியவில்லை
என் நீந்த முடியவில்லை

நான் தொட்டில் மீனாகவே இருந்துருப்பேன்
என்னை என் விடுவித்தார்கள் மனிதர்கள்
இன்று தவிக்கிறேன்.
கடல் ஓரமாய் நான் பாசிகளும், மண்களையும் தின்று தனிமையாய் நான் ....

தின்று தின்று கொழுத்தேன், இன்று திண்டாடுகிறேன் கடலில்
வளைந்து வளைந்து கொடுத்து இருந்தால்
நான் வாழ்ந்து இருப்பேன் நிழலில் ..........

எழுதியவர் : மணியான் (23-Nov-11, 5:18 pm)
சேர்த்தது : maniyan
பார்வை : 291

மேலே