இன்றய தலைமுறை
காலை கதிரவன் கதிரை நீட்ட
செல்லமாய் எழுப்புகிறது நகர்பேசியின் (MOBILE) அலாரம் ....!
விழித்தவுடன் விழிகள் தேடுகிறது
ஒளி உமிழ் இருமுனைய தொலைகாட்சியை(LED TV ) !
ரீங்காரமாய் ஒலிக்கிறது நகர்பேசியின் மணியோசை ( RINGTONE)..!
தொல்லை கொடுத்தாலும் தொடர்ந்து பேசுகிறோம் நகர்பேசியில் ....!
கையடக்க இசைகேளி(ipod) இசையுடன் நகருகிறது நேரங்கள் .!
சின்னதாய் ஒரு இணைய உரையாடல்(CHAT) முகநூலில் (FACE BOOK)...!
மின் அஞ்சலில் ஒரு தேடல் ,
பிறர் நலம் காண சில அஞ்சல்கள் அனுப்புதல் ...!
பிறரை பார்த்து பேச இணைய ஒளிப்படக்கருவியின்(web camera) ஒளி ஒலி சிதறல்கள் ...!
உலகத்தை தேட இணைய தேடு பொறிகள்(search engine) வலை வீசுகிறது ...!
மாலை முழுவதும் யூஎஸ்பி(USB) ஃபிளாஷ் டிரைவ்வில்(pen drive) தகவல் பரிமாற்றம் ...!
இரவு வந்தவுடன் கண்கள் நகருகிறது
தூக்கத்தை நோக்கி கனவுகள் கூட சிறுகருவியின் (gadget) ஆதிக்கம்!