"நல்லவள்"

என் சிரிப்பைப்
பார்த்ததும் என்னைப்
"பைத்தியம்" என்றார்கள் !

என் அழுகையைக்
கண்டதும் என்னை
"அழுமூஞ்சி" என்றார்கள் !

எதிர்த்துக் கேட்கையில்
என்னைத் "திமிர் பிடித்தவள்"
என்றார்கள் !

பாராட்டிப் பேசுகையில்
என்னைப் "பச்சோந்தி"
என்றார்கள்.

குற்றத்தைச்
சொல்லும்போது
என்னைத் "துரோகி"
என்றார்கள் !

எல்லாவற்றிற்கும்
தலையசைத்தபோது
என்னை "நல்லவள்"
என்றார்கள் !!

இன்றைய உலகம் இது தானோ???

செ. சத்யாசெந்தில்,
முதுகலை தமிழ் முதலாம் ஆண்டு,
மைலம் தமிழ் கல்லூரி,
விழுப்புரம் மாவட்டம்,
தமிழ்நாடு - இந்தியா.

எழுதியவர் : செ. சத்யாசெந்தில், முதுகல (25-Nov-11, 8:55 pm)
சேர்த்தது : SathyaSenthil
பார்வை : 336

மேலே