".........சிவகாசி சிறார்கள் ........"
வியர்வை துளிகளால்
எழுதுகிறோம்
உங்கள் சந்தோசத்தை ....
கந்தக மணம்
தொலைத்து
புத்தாடையின் வாசம் ....
பட்டினியின் சோகம் தீர்த்த கண்ணீர் .....
பிஞ்சு விரல் வூடே மத்தாப்பினுள் திரிபட்டு ...
வசை மொழியாய், சாபமாய்
" நமுத்த பட்டாசு , நாசமாய் போக "
வீட்டெதிரே மலை போல கிழிந்த காகிதங்களாய்
அந்தஸ்தை தம்பட்டம் அடிக்கவே ....
சுக்கு நூரக்கப்பட்டது எங்கள் வாழ்க்கை .....
ஒரு நாள் வெளிச்சம் தர
இருளாக்கப்பட்ட
எங்கள் எதிர்காலம் ...
வீதியெங்கும் நஞ்சுப்புகை
விழிகளிலே வெற்றிக்களிப்பு
எரிந்ததென்னவோ நாங்கள்தான்...
ஒளி கொடுக்க
இருளிலே அடை பட்டே
நாங்கள் ....
எங்களுக்கு
என்றோ
தீபாவளி ....??????????????