தனிமை...
எத்தனை நாட்கள்
எனக்குள் நானே பேசிக்கொள்வது..
எனக்காக பேசுகிறது,
இம்முறை இந்த பேனா.
.
.
.
.
என் தலையெழுத்து
இவன் சரித்திரத்திற்கு நான் சாகவேண்டுமாம்!
ஒரு செல் உயிரினம் கூட
ஒழுங்காய் பதில் சொல்லாது, இவன் கேள்விக்கு.
ஏவாள் இறந்திருந்தால்
எப்படி இருந்திருப்பான் ஆதாம்?
எனக்கு மட்டும்தான் தெரியும்.
இவன் என் நண்பன்.
ஊமையாகும் தொலைப்பேசி,
இவன் எண்களை சுழற்றினால்.
உதிர்ந்து போகும்,
உயிருள்ள பூ,
இவன் உற்று நோக்கினால்.
அறையும் வெற்றிடமாகும்,
இவனோடு பேச முயன்றால்.
இதோ அடுத்த வரியோடு
நானும் இறக்கிறேன்.
இனி இவனோடு இருப்பது
தனிமை மட்டும்......