தீர்வு வேண்டும் தீவிரவாதத்திற்கு ( மும்பை தாக்குதல் மூன்றாம் ஆண்டு நினைவு அஞ்சலி )
தீவிரவாதத்தின்
தீவிரம் இங்கே
தீயாய் வளர்ந்து
தீமை விளைத்தது .........
மும்ம்பை தாக்குதல்
முக்கிய குற்றவாளி
முழுதாய் சிக்கி - இன்று
மூன்றாம் ஆண்டு ...............
உண்மை குற்றவாளி
உயிரோடு இங்கு
உரியதண்டனை இன்றி
ஊமையாய் அரசு........
இறந்தவரின் நினைவு இங்கு
இதயத்தை தகர்த்து நிற்க !
இனிதாய் சிறையில் கழிகிறது
இரக்கமற்றவனின் இயல்புவாழ்க்கை .....
பொதுமக்கள் உயிர்காக்க
பொன்னுடல் துய்த்த
பொறுப்பான அதிகாரிகள் ஆன்மாவும்
பொறுமை துறந்திருக்கும் இந்நாளில் ........
மந்தநிலை ஏன் இங்கு அரசே
மரணதண்டனை தந்திடு கொடியவனுக்கு
மாண்டவர்களின் ஆன்மாவுக்கு
மரியாதை வேண்டாமா ?
இன்று மும்பை தாக்குதல் 3 - ஆம் ஆண்டு நினைவுதினம் .......
அவர்களுக்கு இக்கவிதையால் அஞ்சலி செலுத்துகிறேன் . என் எழுத்து நண்பர்களுடன்...