"அனல் மீன்கள்"
என்ன செய்து,
என்ன பயன்?
என்னை
ஏமாற்றிவிட்டாயே?!
நீ எதுவும் சொல்லவில்லை
நான் எதுவும் கேட்கவில்லை,
நீ செய்ததை நான் எதிர்பார்க்கவில்லை,
நான் எதிர்பார்த்ததை நீ செய்யவில்லை!
நீ யாரென்று நான் சொல்லவில்லை,
நான் யாரென்று எனக்கே தெரியவில்லை!
உன்னை புரிந்து கொள்ள முயற்சி செய்தேன்
என்னை நானே எங்கிழந்தேன்?!
நான் கேட்டது என் வாழ்க்கையிடம்!!
வாழ்க்கை சொன்ன பதில்
நாம் அனல் மீன்கள்!...