மாறியது ஏனோ
வகிடெடுத்து வாரம தூக்கி வாருடா..!!
இந்த hairstyle தான் உனக்கு suit ஆகுது..."
மாறியது என் முகம்.... !!!
"plain shirtsa விட striped தான் உனக்கு
எடுப்பா இருக்குடா..."
மாறியது என் உடை... !!
"ஏன் எப்பவும் மூஞ்சிய உம்முன்னு வெச்சுக்கரே
கொஞ்சம் சிரிச்ச மாதிரி இரேன்..."
மாறியது என் முகம்....!!
"உனக்கு என்னைவிட உன் friends
தான் முக்கியம்ல.."
மாறினர் என் நண்பர்கள்..!!!
" வீட்ல நிறைய சொல்லி பார்த்துட்டேன்
அப்பா ஒத்துக்க மாட்டேன் கிறங்க
நாம friends ஆவே இருந்துடலாம்...."
அறிவாயா பெண்ணே...
இம்முறை...
மாறியது......
என் விதி....