மேகம்

மழை துளிகளின் தாயகம் மேகம்
நீரை வாரி இறைக்கும் தூயகம் மேகம்

இடம் விட்டு இடம் பெயரும் வர்ண ஜாலம்
வானில் வளம் வரும் நீயோ அழகு கோலம்

அந்தரத்தில் அசைவாடும் வெண் நுரை
எங்கிருந்து நோக்கினும் இதற்கில்லை திரை

காலை தூரலில் மின்னிடும் பேரெழில்
மாலை மயக்கத்தில் ஜொலித்திடும் தன்னெழில்

ஆகாயத்தில் உலாவும் உன்னில் பொன்னிரமுண்டு
செங்கதிர் உன்னில் பட பொலிவு உண்டு

காயும் கதிரவன் உன் மேனியை தாக்கலாம்
பாயும் மழையாய் நீயும் கொட்டி தீர்க்கலாம்

மின்னிய வெண்மேகம் கருத்திடலாம்
மண்ணில் நீராய் நீயும் வழிந்திடலாம்

மேகத்தின் தூய்மை வெண்மை
வாழ்வின் மேன்மையும் அதுவே!


எழுதியவர் : கசிகரோ (27-Nov-11, 7:49 pm)
Tanglish : megam
பார்வை : 244

மேலே