அந்த பெண்மை

காலையில் எழுந்து
கணவனை வணங்கி
முகம் ஏதும் பார்க்காமல் முகம் கழுவி
ஓரமாய் இருந்த தென்னையை எடுத்து
கூட்டி பெருக்கி முடித்து தண்ணீர் தெளிப்பாள்,
அழகிய கோலம் மிடுவாள்
கதிரவன் விடியல் பார்க்கும் முன்பே .......
மஞ்சள் முழுக்க குளித்து,
முகம் முழுக்க தேய்த்து
தலையினை துவைத்து,
அழகாய் சுற்றி கொள்வாள்
கடவுளை தொழுது முடித்து,
இறைவனின் பாடலில் ராகம் இசைத்து
அழகாய் பாடிடுவாள்
துயலில் இருக்கும் கணவனின்
காதில் மெதுவாய் ரகசியம் சொல்லி
(மெதுவாய் விழிக்க சொல்லி)
தேநீர் கொடுப்பாள் அந்த பெண்மை எங்கே...