தமிழச்சி!

அவமானம் மக்கா அரையாடை உடுத்துவது...
அவ, மானம் எங்க பாக்குறா?
மாடர்ன் தமிழச்சின்னு சொல்லுறா!

அங்கும் இங்கும் நிக்காத - அப்பா பார்த்த வைவாரு.
அங்குமிங்கும் இவ நிப்பா!
அப்புறமா கேப்பா - இது தப்பா?

சொல் போனா போச்சுடி செல்ல மகளே
இவ செல் போனு இல்லனா
நிக்குது எம்மூச்சு என்பா...

ஆத்தா சொல்லிக்கொடுத்தா,
அப்பத்தா சொல்லிக் கொடுத்தா
எத எப்படி கொடுக்கணும்னு.

யார்கிட்ட அவளக் கொடுக்கணும்னு
பயபுள்ளைக
ஆருமிங்கே சொல்லிதரல...

எழுதியவர் : Agniputhran (28-Nov-11, 12:49 pm)
சேர்த்தது : Agniputhran
பார்வை : 234

மேலே