யார் அவள்?
'யார் அவள்?'
மறுபடியும் பொய் சொன்னது,
முட்டாள் மூளை.
அவளை பார்த்த முதல் நொடி!
இன்னும் உயிர்பெறவில்லை,
கொலையுண்ட என் கைக்கடிகாரம்.
பார்க்க மட்டுமே பழகிய என் கண்கள்
பதிவு செய்த முதல் கட்சி,
'அவள் முகம்'
உலர்ந்து போனாலும் ஒன்றை மட்டுமே
உச்சரிக்கும் உதடுகள்,
'அவள் பெயர்'
பலகோடி வார்த்தைகள் ஒலித்தாலும்
ஒரே வார்தையாய் மொழிபெயர்க்கும் செவி,
'Sorry' அவள் என்னிடம் பேசிய ஒற்றை சொல்.
இப்படி எல்லா பாகங்களையும் பாதித்து விட்டு,
பாராமல் போயிருந்தாலும் பரவாயில்லை.
ஏனடி என்மேல் எய்தினாய் உன்
கடைசி கடைக்கண் பார்வையை......