கண்ணன்
கண்ணன்
வானக்கடல்
கடைந்து
வெண்ணெய்
திரண்டு
நிற்கிறது
கண்ணனைக்
கூப்பிடுங்கள்
வானின்கரை
உடைந்து
மேகம்
இருண்டு
நிற்கிறது
கண்ணனைக்
கூப்பிடுங்கள்
கர்ண உடல்
அழிந்து
மின்னல்
போருண்டு
நிற்கிறது
கண்ணனைக்
கூப்பிடுங்கள்
நாணத்திரை
கிழிந்து
மஞ்சில்
உருண்டு
நிற்கிறது
கண்ணனைக்
கூப்பிடுங்கள்.
-சக்தி.
05.09.07.