தோழிக்கு
உன்னோடு பேசாமலிருந்து உன்னை தண்டிக்க வேண்டுமென முடிவெடுத்தேன்
அது செயலாகும்போதுதான் புரிகிறது
தற்கொலை முயற்சி என்று...
உருவாய் உறுப்பாய் பழகிகொள்பவர்களுக்குத்தான் சனியும் ஞாயிறும் இடைவெளியாய்,
பார்க்காத நேரங்கள் தூரமாய்..
ஆனால்,
என் ரத்த நாளங்களுக்குள் ரீங்காரமிட்டுகொண்டிருக்கும் உன் அசட்டுகுரலில் எப்போதும் உன்னோடு பேசிக்கொண்டிருப்பதை உணர்கிறேன்...
பெரும்பாலும் கோப நெருப்பில்தான்
கொழுந்து விடுகிறது
நம் நட்பு
அதிகமாய் உனக்கெதிரே
நிறமற்று நீர்த்துபோய்
நிற்கின்றேன்
ஆனால்
எல்லாமுமாய் இருகின்றாய்
எனக்குள்ளும் எதிரிலும் நீ..
இறுதியாய்..
அடிவயிற்றுபாலுக்கென
அன்னை முகம் நோக்கும்
குழந்தையாய்,
பிடி சோற்றுக்கு கையேந்தும்
பித்தனாய் கேட்கின்றேன்
தோழி,
உன் அன்பை கொடு
இல்லை
இன்னும் மிச்சமிருக்கும் என்னை நீ கொன்றுவிடு