John Suresh - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : John Suresh |
இடம் | : chennai |
பிறந்த தேதி | : 29-Aug-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Oct-2011 |
பார்த்தவர்கள் | : 67 |
புள்ளி | : 10 |
hmmm.. nothing
கவிதை வராத பொழுதுகளில்
கிழித்தெறிந்த காகிதங்களாய்
கசங்கிக்கிடக்கிறது மனது..
எந்த நிலையிலும் தளராத
ஆண்மையும் வீரமும்
அஸ்திவாரம் ஆட்டம்கண்டுபோயிருக்கின்றன..
தோல்விகளைக் கூட மீசையை முறுக்கி
சிரித்தபடியே ஏற்கும் ஜம்பம்
சிதறிகிடக்கிறது
பார்வை நீளும்
எந்த ஒரு மூலையிலும்..
பேசி விடு பேசு விடு என்று
இதயம் எழுப்பும் ஒலிகளில்
சப்தநாடிகளும் ஒடுங்கி,
கௌரவங்களைத் தாண்டி
காதுகள் கிழிகின்றன..
ஏமாற்றவும்
ஏமாற்றங்களை தாங்கிகொள்ளவும் தெரியும்
ஆனால்,
இரண்டையும் எனக்கே செய்வது
எப்படி என விளங்கவில்லை எனக்கு...
பருவ வயதில் பளிங்கு முகத்தில்
அரும்பு மழகாய்ப் பரு.
கனிவாய்ப் பழகிடும் கன்னி யிதழின்
இனிப்பினில் தோற்கும் கனி.
குவிந்த அரும்பும் விரிந்திடக் கண்டு
கவிதை யெழுதிக் குவி.
கதிரின் வரவில் கமலம் மலரும்
உதித்திடு நீயே கதி !
இனிமை ததும்பும் இளமை நினைவு
கனிந்து வருமோ இனி ?
குளிரும் நடுக்கக் குளத்தி லிறங்கிக்
களிப்புற முங்கிக் குளி .
எழுவாய் பயனிலை யாவு மழகாய்
எழுதிப் பழக எழு .
தொழுவத்தில் கட்டி யிருக்கும் பசுவை
எழுந்ததும் கண்டுத் தொழு .
படியேறிச் சென்று பகவானை வேண்டித்
துடிப்புடன் பாடம் படி .
கொடுமையைக் கண்டால் கொதித்துக் கிளர்ந்துக்
கடுந்தண்ட ணையைக் கொடு
உன் கண்களை பற்றி
கவிதை சொல்ல பேராசை
ஆனால்,
ஒவ்வொரு முறை
இமைச் சிமிட்டலிலும்
ஆயிரமாயிரம் கவிதை சொல்லும்
அந்த கண்களுக்கு முன்னால்
எம்மாத்திரம் நானும் என் கவிதைகளும்..??