நிசப்த இடிகள்

கவிதை வராத பொழுதுகளில்
கிழித்தெறிந்த காகிதங்களாய்
கசங்கிக்கிடக்கிறது மனது..

எந்த நிலையிலும் தளராத
ஆண்மையும் வீரமும்
அஸ்திவாரம் ஆட்டம்கண்டுபோயிருக்கின்றன..

தோல்விகளைக் கூட மீசையை முறுக்கி
சிரித்தபடியே ஏற்கும் ஜம்பம்
சிதறிகிடக்கிறது
பார்வை நீளும்
எந்த ஒரு மூலையிலும்..

பேசி விடு பேசு விடு என்று
இதயம் எழுப்பும் ஒலிகளில்
சப்தநாடிகளும் ஒடுங்கி,
கௌரவங்களைத் தாண்டி
காதுகள் கிழிகின்றன..

ஏமாற்றவும்
ஏமாற்றங்களை தாங்கிகொள்ளவும் தெரியும்
ஆனால்,
இரண்டையும் எனக்கே செய்வது
எப்படி என விளங்கவில்லை எனக்கு...

எழுதியவர் : ஜான் சுரேஷ் .ச (18-Apr-13, 6:19 pm)
பார்வை : 71

மேலே