நாட்டு நடப்பு :-3
கடவுள்
கல்லை தரிசனம்
செய்ய நீண்ட
வரிசைகளில் ஏழைகள்
தங்கள் கடவுள்களோடு
காத்திருக்க!
திருட்டு ஓட்டில்
வெற்றி பெற்ற
போலி அரசியல்
தலைவரின் திடீர்
பக்தியில் ஏற்ப்பட்ட
கூட்ட நெரிசலில்
மூச்சித்திணறி பல
கடவுள்கள் பலியாகி
போனார்கள்!
கருத்து:பெற்றோர்களே தயவு செய்து சிந்தியுங்கள் நெரிசல் உள்ள இடங்களில் தங்கள் பிள்ளைகளை அழைத்து செல்லும் முன் பலமுறை சிந்தியுங்கள் இது சரியா,அவசியம் தானா,கூட்ட நெரிசல் ஏற்படுமாயின் எப்படி காப்பது போன்ற பல விஷயங்களை ஆராய்ந்து முன் எச்சரிக்கையோடு செயல்படுங்கள், ஆடம்பர பூஜை அறை உள்ள பணக்கார வீடுகளை விட, ஏழை குடிசைகளில் நேர்மையாய் வாழும் மனிதர்களின் இதயங்களில் குடியிருக்கவே அல்லவா கடவுள் விரும்புவார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
படி(திணி)ப்பு
இயற்கையை நேசிப்பவனை
இயந்திரவியலில் வெட்டி
கவுரவத்திர்க்காக நன்கொடை
கொடுத்து கழுத்தைப்பிடித்து
தள்ளி விடுகிறார்கள்!
நாய் உருட்டிய
தேங்காய் என
இயந்திரவியல் இவனிடமும்
இவன் இயந்திரவியலோடும்!
கருத்து:ஒவ்வொருவருக்கொள்ளும் ஒரு சிறந்த விடயம் ஒளிந்து உள்ளது,அதை கண்டு உணர்பவர் சிறந்து விளங்குகின்றனர்,அறியாதவர்கள் மனம் லயிக்கா அவனுக்கு சற்றும் சம்மந்தமே இல்லாத வேலையை செய்து தானும் கேட்டு அவ்வேலையையும் கெடுத்து விடுகிறார்கள்,பெற்றோர்களே தங்கள் குழந்தைகளுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை கண்டு உணர்ந்து அதை மேம்பட வைக்க சிந்தியுங்கள்,உழையுங்கள் நாளை உங்கள் வீட்டிலும் ஒரு இணை இல்ல சாதனையாளன் உருவாகுவான் நம்புங்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கா(சா)தல்
கண்டதே காதல்
கொண்டதே காமம்
என கழிவு
நீரில் புரளும்
பன்றி போல்
இன்றைய இளைய
சமுதாயத்தில் பலர்!
கை கூடினால்
சில மாதங்களில்
வாழ்க்கையை துலைத்து
நீதி மன்றங்களில்!
இல்லையேல் தற்கொலை
முடிவில்!
கருத்து:காதல் என்றால் என்ன?காதல் யாரோடு புரிவது? காதலின் புனிதம் என்ன?என்பதே தெரியாது காதல் எனும் பெயரில் இவர்களும் கெட்டு இந்த சமூகத்தையும் சீர் கெடுக்கிறார்கள்,காதல் என்பது மேம்பட வாழத்தானே தவிர சாவதற்கு இல்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@