யாருக்கு தெரியும்?..........
ஓட்டுபோடுவது
ஜனநாயக கடமையென்று
சொல்லும் நமது தேசம்,
ஓட்டுபோட்டு தேர்வாகின்றவர்களின்
கடமை என்னென்னவென்று
முழுமையாக சொல்கிறதா?
நான்தான் கேட்கிறோமா?
எனக்கும் தெரியாது.
இங்கே யார் முட்டாள்?
யார் அறிவாளி?
தெளிவாக சொல்பவரும் இல்லை,
கேட்பவரும் இல்லை. ஆயினும்
இது ஜனநாயக அரசு.