திருட்டு மாங்காய் ....

அக்கம் பக்கம் யாருமில்ல
அச்சம் ஏதும் தேவை இல்ல
என் பட்டு பொண்ணே சொக்கத்தங்கம்
உள்ள வாடி தோப்புக்குள்ள

ஆளுயரம் வளந்திருக்கு மாமரம்
இடுப்பொயரம் தொங்கி நிக்குது மாம்பலம்
சில மாங்க சிவந்திருக்கு உன் கன்னம்போல
மாம்பழத்த விட்டுபுடு மாங்காய எட்டி புடி

காட்டுக்கு சொந்தக்காறேன்
காவலுக்கு வந்தவன் நா
மாங்க புளிக்குமுன்னும் திருட்டு மாங்க
திங்கும்போது ருசிக்குமுன்னும்
பாட்டி சொல்ல கேட்டுருக்கேன்
களவாட வந்துபுட்டேன்

மரத்துலையே மாங்காய கடிச்சதுமே
உன் உதட்டு சாயம் ஒட்டிக்கிட்டு
கிளிபோல தொங்குதடி பச்ச மாங்க

மாந்தோப்பு சொந்தகார
மான்கொம்பு மீசகாரா
மாங்காய திருடி
திங்கதா ஆச வந்துச்சோ
மல்லி இவள மசக்கயாக்க
மாந்தோப்பு வசதியாச்சோ
மூணு மாசம் முளுகலையே
முந்தா நாளும் தள்ளி போச்சே

என் பச்ச அரிசி நெல்லு சோறே
பாத்தா பசியெடுக்கும் பொன்னி பேரே
முதல் மாசம் முளுகலன்னு
முன்னாடியே தெரியும் ஆத்தா

ராத்திரி உளற கண்டேன்
ராவெல்லாம் உறக்கம் இல்ல
மாங்க தோப்புக்காரன்
மாங்க தரலயேனு
மஞ்ச மைனா பொலம்ப கண்டேன்
மாங்காடு கூட்டி வந்தேன்

திருட்டு மாங்கதா இனிக்குமுன்னு
என் சின்ன பொண்ண கூட்டியாந்தேன்
காட்டுக்கு காவல்காரன்
களவானி ஆகிபுட்டேன்
மல்லிகப்பூ கொண்டக்காரி
சிட்டேரும்பே உனக்காக

மாங்க புடிச்சிருக்க புளிச்சிருக்க
மிச்சம் வைக்கலையே
மீசைக்காரன் கேட்கலேன்னா?
துணுக்கு கூட குடுக்கலையே !!!

-Jagakutty

எழுதியவர் : jagakutty (2-Dec-11, 7:46 pm)
பார்வை : 897

மேலே