pithaa
ஞானம் தந்திடும் பிதாவை வணங்குவதால்
ஞாலம் நம்மை வாழ்த்துமே.
தந்தையின் சொற்படி நடப்பதால் அவரின்
சிந்தை என்றும் குளிருமே.
ஞாலம் நம்மை என்றும் போற்றிடப்
பாலமாக இருப்பவர் தந்தையே.
நல்லன செய்யும் தந்தைக்கு நாமும்
அல்லன செய்தல் கூடாது.
விந்தைகள் பலவற்றை வாழ்வினில் நிகழ்த்த
தந்தையின் அருளாசி வேண்டுமே.