குங்குமமே வருக
மஞ்சள்
குங்குமத்தை
வரவேற்றது
ஆம்
என் காதலி
மாலையில்
நடந்து வந்தாள்
அந்தி ஆதவனும்
சிவந்து
அழகு காட்டியது
என்னவள்
மெல்ல புன்னகைத்தாள்
அந்தக் கன்னச் சிவப்பில்
ஆதவனும்
அந்திச் சிவப்பும்
தோல்வியை ஒப்புக்கொண்டு
வணங்கி விடைபெற்றது
---கவின் சாரலன்