அவள் வந்தாள்
வண்டமர் மலர்
மலர் விரியும் சோலை
சோலைக் குளிர் தென்றல்
ஓர் ஐயம்
அவளுடன் தென்றல் வந்ததா
தென்றலுடன் அவள் வந்தாளா
இல்லை இரண்டும் இணைந்து
வருகை தந்ததா
இதுதான் சரி
தென்றலாய்
அவள் வந்தாள்
----கவின் சாரலன்