மழை நீர்
நிலத்தடி நீர் குறைவதாலே நமக்கு
மரத்தடி நிழலும் கிட்டாது.
நீரின்றி வாடும் நிலமும் உயிரினமும்
வளமின்றிக் கெட்டே விடும்.
வானம் தந்திடும் மழைநீரைச் சேமிக்கும்
ஞானம் அனைவருக்கும் தேவை.
விவசாயத்திற்கு மழைநீர் இல்லையெனில் என்றும்
பெருங்காயம் ஏற்படும் நமக்கு.
காலத்தே வந்திடும் மழைநீரைச் சேமித்து
ஞாலத்தைக் காத்திடுவோம் நாமும்.