சிறகடித்த சிட்டுக்குருவியே !!!!

காலையில் உன் வரவுதான்,எனக்கு நாள்முழுவதும் நல்வரவாக்கியது .,நீ இடும் சத்தம்தான் எனக்கு சந்தோசம் தந்தது,மரகிளைகளில் நீ விளையாடிய விளையாட்டுகள் என் சிந்தனையில் மறையாமல் இருக்கிறது.,உன்னைப்போல் வாழ எனக்கும் ஆசையாகதான் இருந்தது.,உன்னைப்போல் சுற்றித்திரிய ஆசைப்பட்டேன்.,ஒருநாள் வாழ்ந்தாலும் உன் வாழ்க்கை போல் வாழ வேண்டும் என்று எண்ணினேன்.,ஆனால் இன்றோ உன்னை தேடி அலைகிறேன் .,நீயோ காணாமல் போய்விட்டாய்.,ஊரெல்லாம் கதிர் விச்சை பரப்பி உன் கதையை முடித்துவிட்டோம்.,உன் இனத்தையும் அழித்துவிட்டோம்.,என் வாழ்க்கையில் அழகாக இருந்த உன் குரல் இன்று என் கைபேசியில் அழைப்பு மணியாகதான் ஒலிக்கிறது ..,என்று மீண்டும் வருவாய் என் சிட்டுக் குருவியே!!!!!!!!

எழுதியவர் : prabaz (4-Dec-11, 10:37 am)
சேர்த்தது : tamilan
பார்வை : 520

மேலே